சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத்தகவல்கள்

சுகாதார உள்கட்டமைப்பைப் பெருக்குவதற்கும், நியாயமான கட்டணத்தின் அவசர சிகிச்சை அளிப்பதற்கும் தனியார் துறையை ஈடுபடுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது

Posted On: 15 JUN 2020 8:44PM by PIB Chennai

கொவிட்-19 நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைப் படுக்கை வசதி, வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் அளிப்பதற்கான வசதி, உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய  மருத்துவமனைகளின் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கொவிட்-19 நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், படுக்கைவசதி, அவசர சிகிச்சைக்கான வசதிகளை, சிகிச்சைக்கான நியாயமான, வெளிப்படையான கட்டணத்தில் அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளுடன் பேசுமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் சில மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. நியாயமான கட்டணத்தில், அவசர சிகிச்சை வசதிகளை உள்நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தையும், தனியார் துறையுடன் செய்து கொண்டுள்ளன. பிரதமரின் மக்கள் மருத்துவத் திட்டத்தொகுப்பு மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத் தொகுப்பின் கட்டணங்களும், ஏற்கனவே சில மாநிலங்களில் அமலில் உள்ளன. கட்டணங்கள் பகுதி வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் தனியார் மருத்துவ நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து நியாயமான கட்டணத்தில் கொவிட்-19 நோயாளிகளுக்கு, குறித்த காலத்தில் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட பின், அவற்றை கொவிட் நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் அறிந்து கொள்ளும் வண்ணம், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

----



(Release ID: 1631867) Visitor Counter : 222