மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது-பொறுப்புள்ள மற்றும் மனிதர்களை சார்ந்த வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஏதுவாக இந்தியா இந்த அமைப்பில் இணைந்துள்ளது.

Posted On: 15 JUN 2020 4:59PM by PIB Chennai

உலகில் முன்னணிப் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, கொரியக் குடியரசு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்துசெயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு (GPAI  or Gee-Pay) ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.   செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புபொறுப்பான வளர்ச்சி, மற்றும் செயற்கை நுண்ணறிவு, மனித உரிமைகள் அடித்தளம், உள்ளடக்கிய, பன்முகத்தன்மை, புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் ஒரு சர்வதேச மற்றும் பல்வேறு தரப்பினர் பங்கு பெறும் அமைப்பாகும்.   உறுப்பு நாடுகளின் அனுபவம் மற்றும் பன்முகத் தன்மையைப் பயன்படுத்தி, சவால்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ப்புகளை முழுமையாக உணர்ந்து கொள்ள முதன் முறையாக இதுபோன்ற அமைப்பு தோற்றுவிக்கப்படுகிறது.    இந்தக் குறிக்கோளை அடையபுதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த அமைப்பு,    துல்லியமான ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடைமுறைகளை ஆதரிப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தத்துவம் மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியைப் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்போடு, செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச அமைப்பு, தொழில்துறைமக்கள் சமுதாயம், அரசு மற்றும் கல்வித்துறையில் முன்னணியில் உள்ள நிபுணர்களை ஒருங்கிணைத்துசெயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பரிணாம வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கோவிட்-19  காரணமாக உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் சிக்கலுக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பொறுப்புள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பதற்கான வழிவகைகளை உருவாக்கவும் பயன்படும்

 

இந்தியா, அண்மையில் தேசிய செயற்கை நுண்ணறிவு யுக்தி மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு இணையதளத்தை தொடங்கியிருப்பதோடு,    உள்ளடக்கிய மற்றும் மனிதர்களுக்கு அதிகாரமளிக்கக் கூடிய அணுகுமுறையுடன், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உறுதுணையாக,    கல்வி,  வேளாண்மை, சுகாதாரச் சேவை, மின்னணு வர்த்தகம், நிதி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.    செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச அமைப்பின் நிறுவன உறுப்பினராக இணைந்திருப்பதன் மூலம்உலக அளவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடையச் செய்தற்கும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த தனது அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தியா முக்கியப் பங்குவகிக்கும்.   

 

செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச அமைப்பு செயல்பட உதவியாக ஒரு செயலகம் உருவாக்கப்படுவதுடன்பாரீஸில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பால் வழி நடத்தப்படுவதோடுமான்ட்ரீயல் மற்றும் பாரீஸ் ஆகிய இடங்களில் தலா ஒரு நிபுணத்துவ மையம் வீதம், இரண்டு மையங்களும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

*****(Release ID: 1631759) Visitor Counter : 40