பாதுகாப்பு அமைச்சகம்

மிஷன் சாகர் : ஐஎன்எஸ் கேசரி கப்பல் மொரிஷியஸ் தீவில் உள்ள லூயில் துறைமுகத்திற்கு திரும்பியது

Posted On: 14 JUN 2020 7:16PM by PIB Chennai

மிஷன் சாகரின் ஒரு பகுதியாக, மொரிஷியஸ் நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய கப்பற்படை மருத்துவக் குழுவினரை திரும்ப அழைத்து வருவதற்காக ஐஎன்எஸ் கேசரி கப்பல் அந்நாட்டில் உள்ள லூயிஸ் துறைமுகத்தை ஜூன் 14-ம் தேதியன்று சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த மாதம் 23-ம் தேதியன்று 14 உறுப்பினர்கள் அடங்கிய இந்தியக் கப்பற்படை மருத்துவக் குழுவினரை மொரிஷியல் நாட்டு லூயிஸ் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது. இந்தக் குழுவின் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள், கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பதில் தமது  நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்காக அங்கு சென்றனர்.

   லூயிஸ் துறைமுகத்துக்குச் சென்ற இந்திய மருத்துவக் குழுவினர் அங்குள்ள பிராந்திய மருத்துவமனைகள், ஃப்ளூ மருத்துவமனைகள், மொரிஷியஸில் உள்ள கொவிட் மருத்துவமனை, தனிமைப்படுத்துதல் மையம், மத்திய சுகாதார ஆய்வகம், விக்டோரியா மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் தமது சிறந்த நடைமுறைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

     கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இருநாடுகளுக்கு இடையே சிறப்பான உறவுகளை கட்டமைப்பதற்காக இந்தியா முதல் முதலாக இப்பிராந்தியத்தில் மிஷன் சாகர் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

-----(Release ID: 1631625) Visitor Counter : 12