விண்வெளித்துறை

உயர்தரமான, மலிவு விலை முகக்கவசம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கம்: டாக்டர்ஜித்தேந்திரசிங்

Posted On: 13 JUN 2020 8:42PM by PIB Chennai

உயர்தர, மலிவு விலை முகக்கவசம், அணுசக்தித் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) உருவாக்கப்பட்டுள்ளது. ஹெபா வடிகட்டியைப் பயன்படுத்தி இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. இதன் விலை மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணுசக்தித் துறையின் கடந்த ஓராண்டு சாதனைகளைத் தெரிவித்த, வடகிழக்கு மண்டல மேம்பாடுத்துறை, பிரதமர் அலுவலகம், மத்தியப்பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர்.ஜித்தேந்திரசிங், முகக்கவசம் பற்றியும் தெரிவித்தார்

அணுசக்தித் துறையின் கடந்த ஓராண்டு கால முக்கிய நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் குறிப்பிட்ட டாக்டர்.ஜித்தேந்திரசிங், கோவிட்-19 தொற்று நேரத்தில், விஞ்ஞானிகள் சமூகத்துக்கு உதவ முன்வந்ததைப் பாராட்டினார். அதிகத்தரம் வாய்ந்த முகக்கவசத்தை உருவாக்கியதோடு, தனிநபர்பாதுகாப்பு உடைகளை(PPEs) தொடர்ச்சியான கதிரியக்கம் மூலம் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் அணுசக்தி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்இந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் (SOP) மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்தறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.(Release ID: 1631496) Visitor Counter : 17