அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மிகவும் அவசர கால உடல்நலத் தேவைகளுக்கான முக்கிய பொருள்கள் உடனுக்குடன் கிடைப்பதற்கு வகை செய்வதற்காக சிஎஸ்ஐஆர் தேசிய உடல்நலப் பொருள்கள் வழங்கு தொடர் இணையதளம் துவக்கம்.

Posted On: 13 JUN 2020 1:45PM by PIB Chennai

மிகவும் அவசர கால உடல்நலத் தேவைகளுக்கான பொருள்கள் உடனுக்குடன் கிடைப்பதற்கு வகை செய்யும் நோக்கத்துடன் சிஎஸ்ஐஆர் தேசிய உடல்நலப் பொருள்கள் வழங்கு தொடர் இணையதளம் ஆரோக்கியபத் https://www.aarogyapath.in 12 ஜூன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தற்போது நிலவும் தேசிய அளவிலான சுகாதார நெருக்கடி காலத்தில் உடல்நலம் தொடர்பான பொருள்கள் வழங்குதல், மிகுந்த இடையூறுக்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு காரணங்களால் முக்கியமான பொருள்களை உற்பத்தி செய்வது, வழங்குவது ஆகியவை மிகவும் தடைபட்டுள்ளன. இத்தகைய சவால்களை சமாளிப்பதற்காக, நல்ல உடல் நலத்துடன், ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான பயணத்திற்கான பாதையை அளிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் ஆரோக்கியபத் என்ற தகவல் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

வாடிக்கையாளர்கள் வழக்கமாக அனுபவிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உடல்நலம் தொடர்பான அனைத்து முக்கிய பொருள்களும் கிடைக்கும் விவரங்கள் பற்றி, ஒரே இடத்திலிருந்து அறிந்துகொள்ளும் வகையில், இந்த ஒருங்கிணைந்த பொது இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

வரும் ஆண்டுகளில் தேசிய உடல்நல தகவல் தளமாக இது உருவாகும் என்று சிஎஸ்ஐஆர் எதிர்பார்க்கிறது. இந்தியாவின் கடைக்கோடி பகுதியிலுள்ள நோயாளிக்கும் முக்கியமான மருந்துகள் கிடைக்கும் வகையில், உடல் நல மருத்துவப் பொருள்கள், வாங்கக் கூடிய விலையில் கிடைக்கச் செய்வதில் உள்ள இடைவெளியை நிரப்ப ஆரோக்கியத் இணையதளம் உதவும்.

 

இந்த இணையதளம் சர்வோதயா இன்போடெக் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. உடல் நலத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பயன்படுத்தும் அமைப்பு ரீதியிலான பயனாளிகள், தயாரிப்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்(Release ID: 1631373) Visitor Counter : 19