சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” வெபினார் தொடரின் “இமாச்சலம்-அடுத்த வளைவைச் சுற்றி” என்ற தனது 31வது வெபினாரை மெய்நிகராக நடத்தியது

Posted On: 12 JUN 2020 6:29PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் 11 ஜுன் 2020 அன்று நடத்திய நமது தேசத்தைப் பாருங்கள்என்ற நிகழ்ச்சி வெபினார் தொடரின் 31ஆவது நிகழ்ச்சியாக அமைத்தது.  “இமாச்சலம் அடுத்த வளைவைச் சுற்றிஎன்ற தலைப்பில் அழகான கிராமங்கள், மலைகள், தூய்மையான நதிகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியன இந்த வெபினாரில் எடுத்துக்காட்டப்பட்டன.  “ஒரே இந்தியா உன்னத இந்தியாதிட்டத்தின் கீழ் இந்தியாவின் செறிவான பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வெபினார் தொடர் அமைந்துள்ளது.

நமது தேசத்தைப் பாருங்கள் வெபினார் தொடரின் 11 ஜுன் 2020 நிகழ்ச்சியை சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குர் ரூபிந்தர் பிரார் ஒருங்கிணைத்தார்4டேபிள்ஸ் புராஜெக்ட் (The 4tables Project) நிறுவுர் ஃபிராங்க் ஷ்லிஷ்மேன், சன்ஷைன் ஹிமாலயன் அட்வென்சர்ஸ் மேனேஜிங் ஹோஸ்ட் ஆங்கித் சூட் மற்றும் ஹிமாலயன் ஆர்ச்சர்டு (Himalayan Adventures and Michael & DevansheLidgley,  உரிமையாளர்கள் மைக்கேல், தேவான்ஷிலிட்ஸ்லே ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.  இமாச்சலப் பிரதேசத்தின் இதுவரை யாரும் செல்லாத இடங்கள் மற்றும் பிரத்யேக கலாச்சார, பாரம்பரிய வளத்தை நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மெய்நிகர் முறையில் விளக்கினார்கள்.

வெபினாரின் அடுத்த நிகழ்ச்சி 13 ஜுன் 2020 அன்று காலை 11:00 மணிக்கு “இமாலயாவில் மலையேற்றம் – மாயாஜால அனுபவங்கள்” என்ற தலைப்பில் நடைபெறும். வெபினாரில் பங்குபெற https://bit.ly/HimalayasDAD என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள்.



(Release ID: 1631242) Visitor Counter : 210