ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

NIPER பிராண்ட் மேலும் மெருகடைகிறது: தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், (NIPER) நாட்டில் மருந்தாளுமைப் பிரிவிலான உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்களுள் இடம்பிடித்துள்ளன.

Posted On: 12 JUN 2020 4:52PM by PIB Chennai

மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் மருந்தாளுநர் துறையின் கீழ் செயல்படும் தேசிய மருந்தாளுமைக் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், (NIPER) நாட்டில் மருந்தாளுமைப் பிரிவிலான உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்களுள் இடம்பிடித்துள்ளன.

 

மருந்தாளுமை, மருத்துவக்கருவிகள் துறையில், கல்வி, ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றில் இந்நிறுவனங்கள் கொண்டுள்ள பொறுப்புணர்வையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் இது வலியுறுத்திக் காட்டுகிறது. NIPER பிராண்ட் என்பதற்கு இது மேலும் மெருகூட்டுகிறது.

 

மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்தகவுடா மற்றும் இத்துறைக்கான மத்திய இணைமைச்சர் திரு மான்சுக் மாண்டவியா இந்த வெற்றியை அடைய அயராது பாடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

பல்வேறு பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை, விரிவான ஐந்து அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்திய தரவரிசைப் பட்டியல் 2020 ஐ மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

இந்த தரவரிசைப் பட்டியல் குறித்து மருந்தாளுமைப் பிரிவிலுள்ள தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் மகிழ்ச்சியடையலாம். நாட்டிலுள்ள 7 தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் மொஹாலியில் உள்ள எஸ் எஸ் நகர் தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.. ஐதராபாத் மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரிடம் முன்னுக்கு வந்துள்ளன. சென்ற ஆண்டு போலவே, ஐதராபாத் 5வது இடத்தையும், அகமதாபாத் எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

குவஹாத்தி, ராய் பரேலி, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் முதன்முறையாக 11, 18, 27ஆம்  இடங்களைப் பிடித்துள்ளன.

 

ஆண்டுதோறும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், சட்டம், கட்டடக்கலை, பொறியியல், மேலாண்மை, கல்வி நிறுவனங்களும் மருந்தாளுமைக் கல்வி நிறுவனங்களும் தரவரிசைப்படுத்தப்படுகின்றன

 

******



(Release ID: 1631194) Visitor Counter : 237