கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை விரிவுபடுத்துவதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி
Posted On:
12 JUN 2020 11:17AM by PIB Chennai
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை ரூ.123.95 கோடியில் விரிவுபடுத்துவதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கப்பல் தொடர்பான நடவடிக்கைகள்தான் அந்தமான் நிகோபார் தீவின் வாழ்வாதாரம். பெரும்பாலான வளர்ச்சிப் பணிகள் இதை சார்ந்தே உள்ளன. எந்தத் தடையும் இல்லாமல், கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள, கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். கப்பல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதால், போர்ட் பிளேயரில் தற்போதுள்ள பழுது பார்க்கும் வசதிகள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் விரிவுபடுத்தப்படுகின்றன. தற்போதுள்ள தளத்தின் நீளம் 90 மீட்டர் நீட்டிக்கப்படும். இந்த விரிவாக்கம் கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் மற்றும் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கும் உதவும்.
விநியோகம், உலர்துறையில் நீர் இறைக்கும் குழாய் நிறுவுதல், தெற்கு அந்தமான் போர்ட் பிளேரில் இதர பாகங்கள் அமைத்தல் ஆகியவை உட்பட உலர்துறை-2 விரிவாக்கத் திட்டத்தை மத்தியப் பிரிவு திட்டத்தின் கீழ் ரூ.96.24 கோடியில், 42 மாதங்களுக்குள் முடிப்பதற்கு, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் கடந்த 2016, பிப்ரவரியில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பணியின்நோக்கம், அதிக மற்றும் பெரிய கப்பல்களை நிறுத்துவதற்காக, தற்போதுள்ள கப்பல் தளத்தை 90 மீட்டர் நீட்டிப்பதாகும். இந்த வசதி, போர்ட் பிளேரில் உள்ள தற்போதைய பழுபார்க்கும் திறனை இரட்டிப்பாக்கி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தீவில் உள்ள மக்களின் வருமானத்தை அதிகரிக்கும். இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஆரம்பகட்ட பணிகள் 07.03.2017-ல் தொடங்கியது.
இத்திட்டத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, செலவு மற்றும் நேரம் அதிகமானது. இதனால் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு ரூ.123.95கோடிக்கு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. உலர் துறையின் இந்த நீட்டிப்பு வசதி கப்பல்தொழிற்துறைக்கு 2021, ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாராகிவிடும்.
------
(Release ID: 1631106)
Visitor Counter : 258