அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கேரளா, ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிறுவனத்துடன் இணைந்து இணைய அடிப்படையிலான (IoT) பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் அகற்றுவதற்கான ஸ்மார்ட் பின், புற ஊதா ஒளி அடிப்படையிலான கிருமி நீக்கம் சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது
Posted On:
11 JUN 2020 4:04PM by PIB Chennai
கொச்சினை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சிறு தொடக்க நிறுவனமான விஎஸ்டி மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் (VST Mobility Solutions, ) கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராட உதவும் தயாரிப்புகளை உருவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முகக்கவசத்தை அகற்றும் தானியங்கி இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BIN-19 என பெயரிடப்பட்ட இந்த முகக்கவசம் அகற்றும் சாதனம், சித்ரா புற ஊதா ஒளி அடிப்படையிலான முகக்கவசம் அகற்றும் Bin தொழில்நுட்பத்தை திருவனந்தபுரத்தின் ஸ்ரீ சித்ராத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology - SCTIMST), அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி), கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியது. எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் அவர்களால் இந்த சாதனம் மாவட்ட நிர்வாகத் தலைமையகமான அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டதின் மூலம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை சேகரித்து கிருமி நீக்கம் செய்ய IoT- அடிப்படையிலான BIN-19 (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) பயன்படுத்தப்படுகிறது. இந்த சாதனம் ஸ்ரீ சித்ரா ஆய்வகத்தால் தொடர்ச்சியான வெற்றிகரமான நுண்ணுயிரியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) வழிகாட்டுதலின் படி நாட்டில் புற ஊதா அடிப்படையிலான சாதனங்களுக்கான சோதனை நிறுவனங்களில் ஸ்ரீ சித்ராவும் ஒன்றாகும்.
(Release ID: 1631054)
Visitor Counter : 263