சுற்றுலா அமைச்சகம்

இந்திய சுற்றுலா அமைச்சகம் ”தேகோ அப்னா தேஷ்” தொடரின் கீழ் 30வது வலைத்தள தொடராக ”சத்தீஸ்கரின் மறைக்கப்பட்ட புதையல்கள்” வெளிவருகிறது

Posted On: 10 JUN 2020 6:06PM by PIB Chennai

பார்வையாளர்கள் அதிகம் கண்டடையாத இடங்களை ஆராய்வதற்கும், சத்தீஸ்கரில் வெளியுலகிற்கு அதிகம் தெரியாத இடங்கள், தனித்துவமான கலாச்சாரம், பழங்குடிப் பாரம்பரியம் மற்றும் திருவிழாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சுற்றுலா அமைச்சகத்தின் புகழ்பெற்ற ”தேகோ அப்னா தேஷ்” வலைத்தளத் தொடர் 09.06.2020 அன்று “சத்தீஸ்கரின் மறைக்கப்பட்ட புதையல்கள்” என்ற தலைப்பில் காட்சிப்படுத்தியது. ”ஒரே பாரதம், சிறந்த பாரதம் (Ek Bharat Shreshtha Bharat க் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்) திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக தேகோ அப்னா தேஷ் வலைத்தள தொடர் உள்ளது.

ஜூன் 09, 2020 அன்று ”தேகோ அப்னா தேஷ்” வலைத்தளத் தொடரின் 30 வது அமர்வு சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ரூபீந்தர் பிராரால் ஒளிப்பரப்பட்டது. சுற்றுலா அமைச்சகம். சத்தீஸ்கர் அரசாங்கத்தின் செயலாளர் (சுற்றுலா மற்றும் கலாச்சாரம்) பி.அன்பழகன் இந்த வலைத்தளத் தொடர் பற்றிய பின்புலத்தை தனது அறிமுகக் கருத்துகளுடன்  எடுத்துரைக்க, இந்த அமர்வை ஜஸ்பிரீத் சிங் பாட்டியா, ஐஸ்க்யூப்ஸ் ஹாலிடேஸ் நிறுவனர், ஜீத் சிங் ஆர்யா, unexplored Bastar என்ற சுற்றுலா நிறுவனத்தலைவர் மற்றும் ஆசிரியர்  பிளாகர் தம்மன் ஜோஸ் ஆகியோர். தொகுத்து வழங்கிர், இந்நிகழ்வை வழங்கிய மூவரும் சத்தீஸ்கரின் அதிகம் அறியப்படாத இடங்களின் தனித்துவமான கலாச்சார மற்றும் பாரம்பரிய செல்வங்களை பற்றி மேற்கோள் காட்டி சிறப்பித்தனர்.

நாட்டின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் சில சத்தீஸ்கரில் உள்ளன, அவற்றில் சில சித்ரகோட், அமிர்தாரா, பவாய், மச்லி போன்றவை. சத்தீஸ்கர் சாம்பாரண்யா, ராஜீம் மற்றும் ஷோரினாராயண் ஆகிய மூன்று சக்தி பீடங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தேனிரும்பு, வெண்கலம் மற்றும் டெரகோட்டா ஆகியற்றால் செய்யப்பட்ட பிரபலமான கைவினைப் பொருள்கள் சத்தீஸ்கரின் சிறப்பாகும்.

இந்த வலைத்தளத் தொடரின் அமர்வுகள் இப்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/ என்ற இணைய தளத்திலும் இந்திய அரசாங்கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த வலைத்தளத் தொடரின் அடுத்த பகுதி , ஜூன் 11, 2020 அன்று காலை 11.00 மணிக்கு” இமாச்சலம் - அடுத்த வளைவுகளை சுற்றி”. என்ற தலைப்பின் கீழ் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கு பதிவு செய்ய இங்கே சுட்டவும் https://bit.ly/HimachalDAD(Release ID: 1630820) Visitor Counter : 18