விண்வெளித்துறை

தமது திறன்மேம்பாட்டிற்காக, ஐஎஸ்ஆர்ஓ வசதிகளையும், பிறசொத்துக்களையும் தனியார்துறை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 09 JUN 2020 8:10PM by PIB Chennai

தமது திறன் மேம்பாட்டிற்காக, தனியார் துறை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ஐஎஸ்ஆர்ஓ) வசதிகளையும், பிற சொத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

            மோடி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், கடந்த ஓராண்டாக விண்வெளி தொழில்நுட்பத்துறையில், இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட “தற்சார்பு இந்தியாவுக்கான” வரைபடம் விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும் வண்ணம்  அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய விண்வெளித்துறையின் பயணத்தில் சகபயணியாக இந்திய தனியார்துறை இருக்கும். செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி தொடர்பான சேவைகளில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க முடியும்.

------



(Release ID: 1630607) Visitor Counter : 257