நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரியை இடமாற்றம் செய்ய பரிமாற்றச் சீரமைப்பு வழிமுறை புகுத்தப்பட்டுள்ளது.
प्रविष्टि तिथि:
09 JUN 2020 6:34PM by PIB Chennai
நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நுகர்வோருக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்கான தூரத்தைக் குறைப்பதற்காக நிலக்கரி நிறுவனங்களின் நிலக்கரி இணைப்புகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து உள்கட்டமைப்பின் சுமையைக் குறைக்கவும், வெளியேற்றத் தடைகளை எளிதாக்கவும் இந்த சீரமைப்புப் பயிற்சி உதவும்.
கடந்த கால சீரமைப்புப் பயிற்சிகள் மின்துறைக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன, இதன் விளைவாக 63.12 மெட்ரிக் டன் நிலக்கரி இணைப்பு சீரமைப்பு செய்யப்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.3769 கோடி சேமிப்பினை ஈட்டியது. கடந்த கால சீரமைப்புப் பயிற்சிகளைப் போலன்றி, இணைப்பு சீரமைப்பு தொடர்பான தற்போதைய வழிமுறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறை (NRS) ஆகியவற்றை உள்ளடக்கியது, ஏனெனில் அனைத்து வகையான நுகர்வோர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் நிலக்கரி மாற்றமும் அனுமதிக்கப்படுகிறது.
மொத்த கலோரிஃபிக் மதிப்பு (GCV) சமநிலையின் அடிப்படையில் நிலக்கரி அளவை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது கோக்கிங் அல்லாத நிலக்கரிக்கு மட்டுமே பொருந்தும்.
*********
(रिलीज़ आईडी: 1630537)
आगंतुक पटल : 261