ஆயுஷ்
                
                
                
                
                
                
                    
                    
                        2020 சர்வதேச யோகா தினம் :  ஜூன் 10 அன்று முன்னோட்ட நிகழ்ச்சி தூர்தர்ஷன் செய்திகள் சேனலில் நேரலை
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                09 JUN 2020 12:52PM by PIB Chennai
                
                
                
                
                
                
                2020 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.   இந்த முன்னோட்ட நிகழ்ச்சியானது ஜூன் 10-ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை, தூர்தர்ஷன் செய்திகள் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.  இது ஆயுஷ் அமைச்சகத்தின் முகநூல் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பாகும். 
    சர்வதேச யோகா தினத்திற்கான முன்னோட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், பிரதமர் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  இந்திய கலாச்சார உறவுகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் வினய் சகஸ்ரபுத்தே ஆகியோர் மின்னணு ஊடகம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளனர். 
     இந்த முன்னோட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜூன் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசைகளில் யோகா தொடர்பான பயிற்சி அமர்வுகள், தினமும் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை  ஒளிபரப்பாக உள்ளன.  யோகா பயிற்சி நிறுவனமான மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இதனை நடத்துகிறது.
-----
                
                
                
                
                
                (Release ID: 1630439)
                Visitor Counter : 324
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam