பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
சிறு வனப்பொருட்களை திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை செலுத்தி மாநிலங்கள் கொள்முதல்: பழங்குடியினருக்கான வருவாய் பெருக்கும் நடவடிக்கைகள் தீவிரம்
Posted On:
09 JUN 2020 11:46AM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைஃபெட் நிறுவனம், வன்தான் மதிப்புக்கூட்டும் செயல்பாடுகளுக்கு உதவுவதன் மூலம் பழங்குடி மக்களின் வருவாயைப் பெருக்கவும், நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், சிறு வனப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 17 மாநிலங்கள், ரூ.50 கோடி மதிப்பிலான சிறு வனப்பொருட்களை கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகளால், 7 மாநிலங்களில் உள்ள தனியார் முகமைகள், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கூடுதலாக பணம் செலுத்தி, சிறு வனப்பொருட்களை கொள்முதல் செய்துள்ளன.
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் குறைந்தபட்ச ஆதார விலையை திருத்தியமைத்து வெளியிட்ட அறிவிப்பினாலும், ட்ரைஃபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளினாலும், பழங்குடியின மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலைக்கும் அதிகமான விலையினை சந்தையில் பெறுகின்றனர். இதனால் அவர்களின் வருவாய் கூடியுள்ளது.
-----
(Release ID: 1630432)
Visitor Counter : 253