ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு 2022-23-க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கர்நாடக மாநிலம் திட்டம்

Posted On: 08 JUN 2020 5:42PM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்கான ஆண்டு செயல்திட்டத்தை கர்நாடக மாநில அரசு ஜல்சக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான மாநிலத்தின் செயல்திட்டத்துக்கு காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்த குடிநீர் மற்றும் தூய்மைத் துறைச் செயலர் ஒப்புதல் வழங்கினார். பிரதமரின் விருப்பத்திற்குரிய திட்டமான ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த மாநிலங்களுடன் சேர்ந்து செயல்திட்டத்தை வகுக்க ஜல்சக்தி அமைச்சகம் வழிமுறைகளை தயாரித்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் கிராமப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தினசரி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு மாநிலத்தில் 2022-23க்குள் இத்திட்டத்தை 100% நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 89 லட்சம் ஊரகப்பகுதி வீடுகளில், 24.50 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. 2019-20இல், 22,127 குழாய் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. எஞ்சிய வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்க பெரும் வாய்ப்புகள் உள்ளன. 2020-21-ஆம் ஆண்டில் 23.57 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 202-21இல் ஒரு மாவட்டம், 5 வட்டாரங்கள், 8157 கிராமங்களில் 100% இத்திட்டத்தை செயல்படுத்த அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்குக் குழாய் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உள்ளடக்கிய சமத்துவக் கொள்கையை இதில் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் வலியுறுத்துகிறது. அதேசமயம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இந்த வசதியை வழங்க மாநிலம் உத்தேசித்துள்ளது. இந்த ஆண்டில், தற்போது உள்ள 3,139 குழாய் மூலம் குடிநீர் விநியோக முறைகளை மாற்றியமைத்து, குடிநீர் வழங்கலை அதிகரித்து, 23.57 லட்சம் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் பிரச்சார பாணியில் துவங்க உள்ளன.



(Release ID: 1630276) Visitor Counter : 165