நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

முடக்க நிலையின்போது 3965 ரயில் பெட்டிகளில் சுமார் 111.02 எல்எம்டி உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டன

Posted On: 07 JUN 2020 7:02PM by PIB Chennai

கடந்த மார்ச் 24-ம் தேதியன்று அறிவிக்கப்பட்ட முடக்கநிலை காலகட்டத்தில், 3965 ரயில் பெட்டிகளில் சுமார் 111.02 எல்எம்டி உணவு தானியங்கள்    ஏற்றப்பட்டு நாடெங்கும் கொண்டு செல்லப்பட்டன. இருப்புப் பாதை தவிர, சாலை மற்றும் நீர்வழிப் பாதைகளிலும், உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.  மொத்தம் 234.51 எல்எம்டி உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டன. 15,500 எம்டி தானியங்கள் 13 கப்பல்களில் ஏற்றப்பட்டு  எடுத்துச் செல்லப்பட்டன. மொத்தம் 11.30 எல்எம்டி உணவு தானியங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும்  பிரதமரின் கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ்  விநியோகிப்பதற்காக, அடுத்த மூன்று மாதங்களுக்கு மொத்தம் 11.5 எல்எம்டி உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவைப்படுகின்றன.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், சுமார் எட்டு கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,  பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு, 8 எல்எம்டி உணவு தானியங்களை அளிப்பதென மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இவர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ, மாநிலங்களின் பொது விநியோகத் திட்டத்தின் குடும்ப அட்டை வாயிலாகவோ பலனடையாதவர்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும், மே மற்றும் ஜூன் மாதங்களில் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

-----



(Release ID: 1630173) Visitor Counter : 262