பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

தாய்மை அடையும் வயது, பேறுகால உயிரிழப்பைக் குறைப்பதற்கான தேவைகள் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக பணிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Posted On: 06 JUN 2020 11:53AM by PIB Chennai

தாய்மை அடையும் வயது, பேறுகால உயிரிழப்பைக் குறைப்பதற்கான தேவைகள் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக 4 ஜூன் 20 20 அன்று அரசிதழ் (கெசட்) அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

இத்ற்கான பணிக்குழு வருமாறு:

 

  1. திருமிகு ஜெயா ஜெட்லி (புது தில்லி)       - தலைவர்
  2. டாக்டர் வினோத் பால், உறுப்பினர் (சுகாதாரம்), நிதி ஆயோக்           - உறுப்பினர் (Ex-officio)
  3. செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் -             உறுப்பினர் (Ex-officio)
  4. செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்- உறுப்பினர் (Ex-officio)
  5. செயலர், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை  உறுப்பினர் (Ex-officio)

 

  1. செயலர், உயர்கல்வித்துறை-                     உறுப்பினர் (Ex-officio)
  2. செயலர், சட்டத்துறை -                                 உறுப்பினர் (Ex-officio)
  3. திருமிகு நஜ்மா அக்தர் (புது தில்லி) -       உறுப்பினர்
  4. திருமிகு வசுதா காமத் (மகாராஷ்ட்ரா)-    உறுப்பினர்
  5. டாக்டர் தீப்தி ஷா (குஜராத்) -                     உறுப்பினர்

 

இந்தப் பணிக்குழுவின் பணிக்குறிப்புகள் வருமாறு:

 

  1. பெண்களுக்கான திருமண வயது, தாய்மை அடையும் வயது ஆகியவற்றுக்கும் a) கருவில் இருக்கும் குழந்தை, கைக்குழந்தை, குழந்தை ஆகியோரின் ஊட்டச்சத்து நிலைமைக்கும், கருவுற்றிருக்கும் பெண்கள் , குழந்தை பிறந்தவுடன், அதற்குப் பிறகு இருக்கும் பெண்களின் சுகாதாரம், உடல் நலம், ஊட்டச்சத்து நிலைமை ஆகியவற்றுக்கான தொடர்புகள்.

 

b) குழந்தைகள் இறப்பு விகிதம் , மகப்பேறின் போது இறக்கும் விகிதம், மொத்த கருவுறும் விகிதம், பாலினப் பிறப்பு விகிதம், குழந்தைகளின் பாலின விகிதம் போன்ற முக்கிய அம்சங்கள்.

 

c) இந்த அம்சங்கள் தொடர்பான சுகாதார ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட , தொடர்புள்ள வேறு விஷயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தல்.

 

  1. பெண்களிடையே உயர்கல்வியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை அளித்தல்.
  2. பணிக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாக தேவையான சட்டங்களை கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் / தற்போதைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை வழங்குதல்.

 

  1. பணிக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான திட்டங்களை கால வரையறையுடன் தயாரித்தல்.

 

  1. பணிக்குழு, தேவைப்படும் போது தனது கூட்டங்களுக்கு மற்ற நிபுணர்களை அழைக்கலாம்.

 

  1. இந்தப் பணிக்குழுவிற்கு நிதிஆயோக்கிலிருந்து செயலக உதவி அளிக்கப்படும். இக்குழு தனது அறிக்கையை 31 ஜூலை 2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

 

 

***


(Release ID: 1629864)