எரிசக்தி அமைச்சகம்

NHPC-யில் `உலக சுற்றுச்சூழல் தினம் 2020' கொண்டாட்டம்

Posted On: 05 JUN 2020 4:50PM by PIB Chennai

என்.எச்.பி.சி.யின் இந்தியாவின் முதன்மையான நீர்மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனம் `உலக சுற்றுச்சூழல் தினம் 2020'-ஐ மிகுந்த உற்சாகத்துடன் அதன் கார்ப்பரேட் அலுவலகத்திலும், அதன் அனைத்து பிராந்திய அலுவலகங்கள், மின் நிலையங்கள் மற்றும் திட்டப் பணி அமைவிடங்களில் 2020 ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடியது.

என்.எச்.பி.சி. (National Hydropower generation company –NHPC) அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் பிரதானமான அம்சமாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்த `மூலிகைப் பூங்கா' இருந்தது. தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் மருத்துவ முக்கியத்துவத்தை அனைத்து அலுவலர்களும் அறிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மூலிகைப் பூங்கா  உருவாக்கப் பட்டுள்ளது. விழாவின் போது, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இயக்குநர்கள் மற்றும் சி.வி.ஓ. ஆகியோர் பல வகையான மூலிகை நாற்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் அலுவலர்களுக்கு சுமார் 700 மருத்துவத் தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை உருவாக்கும் வகையிலும் இவை வழங்கப்பட்டன.

 



(Release ID: 1629736) Visitor Counter : 203