அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கோவிட-19 பற்றிய அறிவியல் ஒத்துழைப்புக்கான ஆராய்ச்சிக் கருத்துருக்கள் வரவேற்கப் படுகின்றன

Posted On: 05 JUN 2020 3:59PM by PIB Chennai

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்  இடையே கோவிட-19 பற்றிய  அறிவியல் ஒத்துழைப்புக்கான ஆராய்ச்சிக் கருத்துருக்கள் வரவேற்கப் படுகின்றன. 2020 ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற இந்திய- ஆஸ்திரேலியா தலைவர்கள் நிகர்நிலை உச்சி மாநாட்டின் போது  பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. ஸ்காட் மோரிசனும், 2020இல்  கோவிட -19 குறித்த சிறப்பு ஒத்துழைப்பு பற்றிக்   கூட்டாக அறிவித்தனர்.

அதன்படி, இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் தொழில் நுட்டபத்துறை, ஆஸ்திரேலியாவின் தொழில் அறிவியல் எரிசக்தி மற்றும் ஆதாரங்கள் துறை ஆகியன இணைந்து கோவிட -19 குறித்த குறுகிய கால  ஆராய்ச்சிக் கருத்துருக்களை அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வரவேற்றுள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் கூட்டாக நிதியளித்து நிர்வகித்து வரும் ஆஸ்திரேலியா-இந்தியா  முக்கிய ஆராய்ச்சி நிதியத்தின் கீழ் இக் கருத்துருக்கள்  வரவேற்கப்பட்டுள்ளன.

வைரஸ் எதிர்ப்புப் பூச்சுக்கள், இதர தடுப்புத்  தொழில்நுட்பங்கள், தரவுப் பகுப்பாய்வு, மாதிரிகள் உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு முறைகள், மேலெழுந்தவாரி மற்றும் நோயறி சோதனைகள் போன்ற துறைகள் சார்ந்தவைகளாக இந்த  ஆராய்ச்சிக் கருத்துருக்கள் இருக்க வேண்டும்..கோவிட்  பெருந்தொற்றுக்கு தீர்வுகாணும் நடைமுறைகளை கவனத்தில் கொண்டவைகளாகவும்  செயல் அளவு முடிவுகளை எதிர்நோக்கியவைகளாகவும் இருக்கும் குறுகியகால கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மானிய நிதி உதவி வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும். ஆஸ்திரேலியா , இந்தியா நாடுகளில் தற்போது கோவிட-19 தொடர்பான தடுப்பு ஊசி மருந்துகள், சிகிச்சை மருந்துகள், நோயறி நடைமுறைகள் மற்றும் கோவிட -19 பெருந்தொற்றுக்கு உலக அளவில் பங்களிக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும் திட்டங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளிலும் செயல்படும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிப்பதும் இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் குறித்த விவரங்களை onlinedst.gov.in. என்ற வலைதளத்தில் காணலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 2020 ஜூலை 2ஆம் தேதி ஆகும்.

 



(Release ID: 1629726) Visitor Counter : 185