சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 03 JUN 2020 5:10PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், பூட்டானுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்புக்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

விவரங்கள்;

சம்பங்கு, பரஸ்பர நலன்,  அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.

 

இருதரப்பு நலன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுச்சூழல் குறித்த பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

 

காற்று;

கழிவு;

ரசாயன மேலாண்மை;

பருவநிலை மாற்றம்;

மற்ற பகுதிகள் கூட்டாக முடிவு செய்யப்படும்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன், பத்தாண்டு காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், இரு தரப்பிலும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது பற்றிய அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் , இரு தரப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். கூட்டுப் பணிக்குழு, நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றி ஆராய இருதரப்புக் கூட்டங்கள் நடத்துவது,  சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், முகமைகள் ஆகியவற்றை இதில் ஈடுபடுத்துவது, முன்னேற்றம் மற்றும் சாதனைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை இருதரப்பும் நோக்கமாகக் கொள்ளும். 

--------------(Release ID: 1629137) Visitor Counter : 83