தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இபிஎப்ஓ தனது 52.62 லட்சம் சந்தாதாரர்களின் விவரங்களை 2020 ஏப்ரல் 1 முதல் அப்டேட் செய்து வருகிறது

Posted On: 03 JUN 2020 12:36PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று நிலவும் சூழலில், மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஆன்லைன் சேவைகளை நீட்டிக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎப்ஓ , உங்கள் வாடிக்கையாளர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்னும் (கேஒய்சி) முறையின் மூலம், தனது 52.62 லட்சம் சந்தாதாரர்களின், விவரங்களை 2020 ஏப்ரல், மே மாதங்களில் கேட்டுப் பெற்று அப்டேட் செய்துள்ளது. இதில், 39.97 லட்சம் சந்தாதாரர்களுக்கு ஆதார் எண்களும், 9.87 லட்சம் சந்தாதாரர்களுக்கு கைபேசி ( யுஏஎன் ஆக்டிவேசன்) எண்களும், 11.11 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு எண்கள்ஆகியவை பெறப்பட்டுள்ளன. கேஒய்சி என்பது ஒரு தடவை மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும். இதன் மூலம், சந்தாதாரரின் அடையாளத்தை சோதிக்கவும்,  சந்தாதாரரின் விவரங்களை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன்( யுஏஎன்) இணைக்கவும் முடியும்.

மேலும், கேஒய்சி விவரங்களைப் பெருமளவில் பெறுவதற்கு இபிஎப்ஓ பெரும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும், விவரங்களைச் சோதிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், கடந்த இரண்டு மாதங்களில், 4.81 லட்சம் பெயர் திருத்தங்கள், 2.01 லட்சம் பிறந்த தேதி திருத்தங்கள், 3.70 லட்சம் ஆதார் எண் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.



(Release ID: 1628994) Visitor Counter : 256