அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

என் ஐ எஃப்-ன் (தேசிய புதுமை அறக்கட்டளை-இந்தியா) கோவிட்-19 சவால் போட்டியில் பொதுமக்கள் உருவாக்கிய புதுமையான தொற்று நீக்கம் மற்றும் துப்புரவுக் கருவிகள் தேர்வு

प्रविष्टि तिथि: 02 JUN 2020 10:55AM by PIB Chennai

கோவிட்-19 சவால் போட்டி (C-3) பொதுமக்கள் கண்டுபிடித்த இரண்டு புதுமையான தொற்று நீக்கக் கருவிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி அமைப்பு  தேசிய புதுமை அறக்கட்டளை – இந்தியா (என்ஐஎஃப்) சமீபத்தில் ஆதரவளித்துள்ளது.

தொற்று நீக்க உபகரண வாகனம் மற்றும் கைகளின் உதவியின்றி, காலால் இயக்கப்படும் கிருமி நாசினி தாங்கி ஆகிய இரண்டும் இந்த போட்டியின் கீழ் சமீபத்தில் ஆதரவு பெற்ற புதுமை கண்டுபிடிப்புகளாவை.

தொற்று நீக்க உபகரண வாகனம், குறைந்த நேரத்தில் சிரமமின்றி, வாகனங்களை தானாக தொற்று நீக்குகிறது. இது நேரத்தையும், சக்தியையும் குறைக்கிறது.

காலால் இயக்கப்படும் கிருமி நாசினி தாங்கி, வீடுகள், வணிக வளாகங்கள், மற்றும்  தொழிற்சாலைகளுக்கு சிறந்த சுகாதார தீர்வு.  இந்த தாங்கியின் அடிப்பகுதியில் உள்ள மிதி்ப்பானை, காலால் மிதிப்பதன் மூலம் கிருமிநாசினி வெளிப்படும்.


(रिलीज़ आईडी: 1628624) आगंतुक पटल : 335
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Telugu