பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

காரீஃப் பயிர்களுக்கு 2020-21 சந்தைப் பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலைகள் (MSP).

Posted On: 01 JUN 2020 5:47PM by PIB Chennai

மாண்புமிகு பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார உறவுகளுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ((CCEA) 2020-21 சந்தைப் பருவத்துக்கு அனைத்து கட்டாய காரீஃப் பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSPs) அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.

வேளாண் பயிர்களைப் பயிர் செய்தவர்களுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு 2020-21 சந்தைப் பருவத்துக்கான காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலைகளை அதிகரித்துள்ளது.  குறந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச அதிகரிப்பு என்பது நைஜர் விதைக்கு (ஒரு குவிண்டாலுக்கு ரூ.755) என முன்மொழியப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து எள் (ஒரு குவிண்டாலுக்கு ரூ.370), உளுந்து (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300) மற்றும் பருத்தி (நீண்ட இழைப்பருத்தி) (ஒரு குவிண்டாலுக்கு ரூ.275) என விலை அதிகரிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.  மாற்று நிர்ணய விலையானது பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 சந்தைப் பருவத்துக்கான அனைத்து காரீஃப் பயிர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை:

 

வரிசை எண்

பயிர்கள்

முன்கணிப்புச் செலவு* கேஎம்எஸ் 2020-21

காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2020-21

எம்எஸ்பி அதிகரிப்பு (அறுதியானது

உற்பத்திச் செலவை விட கூடுதலாக வருமானம் (%)

1

நெல் (பொதுரகம்)

1,245

1,868

53

 

50

2

நெல் (தரம் ஏ)^

-

1,888

53

 

-

3

வெள்ளைச் சோளம் (கலப்பினம்)

1,746

2,620

70

 

50

4

வெள்ளைச் சோளம் (மால்தண்டி)^

-

2,640

70

 

-

5

கம்பு

1,175

2,150

150

 

83

6

கேழ்வரகு

2,194

3,295

145

 

50

7

மக்காச்சோளம்

1,213

1,850

90

 

53

8

துவரம் பருப்பு (ஆர்கார்)

3,796

6,000

200

 

58

9

பச்சைப்பயிர்

4,797

7,196

146

 

50

10

உளுந்து

3,660

6,000

300

 

64

11

மணிலா

3,515

5,275

185

 

50

12

சூரியகாந்தி விதை

3,921

5,885

235

 

50

13

சோயாபீன்ஸ் (மஞ்சள்)

2,587

3,880

170

 

50

14

எள்

4,570

6,855

370

 

50

15

நைஜர் விதை

4,462

6,695

755

 

50

16

பருத்தி நடுத்தர இழை)

3,676

5,515

260

 

50

17

பருத்தி (நீண்ட இழை)^

-

5,825

275

 

-

 

^ நெல் (ஏ தரம்), வெள்ளைச்சோளம் ((மால்தண்டி) மற்றும் பருத்தி (நீண்ட இழை) ஆகியவற்றுக்காக தனியாக செலவு குறித்த தரவு தொகுக்கப்படவில்லை.

2020-21 சந்தைப் பருவத்துக்கு காரீஃப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என்பது மத்திய பட்ஜெட் 2018-19இல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு அனைத்திந்திய காரணிப் பெருக்க சராசரி உற்பத்திச் செலவைவிட (CoP), 1.5 மடங்கு என்ற குறைந்தபட்ச அளவுக்காவது குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற அறிவிப்பின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தங்களது உற்பத்திச் செலவோடு ஒப்பிட விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய எதிர்பார்ப்பு லாபமானது கம்பு (83%) தானியத்தைப் பொறுத்தளவில் அதிகபட்சமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து உளுந்து (64%), துவரம்பருப்பு (58%) மற்றும் மக்காச்சோளம் (53%) எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  மீதி உள்ள பயிர்களுக்கு உற்பத்திச் செலவை விட வருமானம் குறைந்தபட்சம் 50% அதிகமாக இருக்கும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கு நியாமான விலை கிடைப்பதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய பெருந்திட்டமாக அரசால் 2018இல் அறிவிக்கப்பட்ட “பிரதம மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்‌ஷன் அபியான்” (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan - PM-AASHA) என்ற திட்டம் விவசாயிகளுக்கு தங்கள் விளைச்சல் மீது குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்ட உதவுவதாக உள்ளது.

மேலும்) ஊரடங்கு காலகட்டமான 24-3-2020 முதல் இன்று வரை பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் (PM-KISAN 8.89 கோடி விவசாயக் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன.  இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 17,793 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் நிலவுகின்ற இந்த நெருக்கடியான சூழலில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு பருப்புகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களுக்கு 1,07,077.85 மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.(Release ID: 1628415) Visitor Counter : 68