புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்திய, அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; மகாராஷ்ட்ரா- தெற்கு குஜராத் கரையோரங்களில் புயலுக்கு முந்தைய கண்காணிப்பு.

Posted On: 01 JUN 2020 12:32PM by PIB Chennai

தென்கிழக்கு மற்றும் அதையொட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி , தீவிரமடைந்து  ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கிழக்கு மத்திய, அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் இன்று காலை இந்திய நேரப்படி, 0530 மணி நிலவரப்படி, அட்சரேகை 13.0 டிகிரி வடக்கு, தீர்க்க ரேகை 71.4 கிழக்கில் , பாஞ்சிம் (கோவா)-க்கு தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு ( மாகாராஷ்ட்ரா) தெற்கு, தென்மேற்கில் 690 கிலோமீட்டர் தொலைவிலும், சூரத்துக்கு ( குஜராத்) தெற்கு, தென்மேற்கு திசையில் 920 கிலோமீட்டர் தொலைவிலும்  நிலை கொண்டிருந்தது. இது மேலும் தீவிரமடைந்துஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கிழக்கு மத்திய, அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில், நிலை கொள்வதுடன், மேலும்  24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதுஜூன் 2-ஆம் தேதி காலை வரை, முதலில் வடக்கு திசையில் நகரும் அது, பின்னர் வளைந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து , வடக்கு மாகாராஷ்ட்ரா மற்றும் தெற்கு குஜராத் கரையில், ஜூன் 3-ஆம் தேதி  மாலை அல்லது இரவில் ஹரிஹரேஷ்வர் ( ராய்கட், மகாராஷ்ட்ரா) மற்றும் டாமனுக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும்.



(Release ID: 1628350) Visitor Counter : 228