சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம் 26 வது தேகோ அப்னா தேஷ் இணையத் தொடரை 'உயிர்வாழும் தன்மை - கட்சின் உத்வேகம் தரும் கதை' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது.
Posted On:
01 JUN 2020 1:05PM by PIB Chennai
30.05.2020 அன்று சுற்றுலா அமைச்சகத்தின் ”தேகோ அப்னா தேஷ்” இணையத் தொடரின் 26 வது அமர்வு “உயிர்வாழும் தன்மை” - கட்சின் உத்வேகம் தரும் கதை” என்ற தலைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமான குஜராத்தின் கட்சின் வரலாறு, கலாச்சாரம், கைவினைப்பொருள்கள், ஜவுளி பாரம்பரியம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றைக் காட்டியதுடன் இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராகப் போராடும் கட்ச் மக்களின் தன்னம்பிக்கை, மற்றும் இந்திய நாகரிகத்தை வரையறுக்கும் தொடர்ச்சியான இயக்கவியலை உருவாக்கும் திறன்கள் கொண்டதாக அமைந்துள்ளது. "Kutch nahi Dekha toh Kuch nahi Dekha" என்ற கட்சின் செய்தியை இணையத் தொடர் காண்பித்தது. ”Ek Bharat Shreshtha Bharat” -இன் கீழ் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த தேகோ அப்னா தேஷின் இணையத் தொடர் விளங்கும்.
இணையத் தொடரின் இந்த அமர்வு சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் திருமதி ரூபிந்தர் பிராரால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரிய ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் நவினா ஜாஃபா வழங்கினார்.
இந்த விளக்கக் காட்சியின் முக்கிய சிறப்பம்சங்கள் அஜ்ராக் பாரம்பரியத் தொகுதி அச்சுப்பொறிகளின் சமூகத்தை இணையம் மூலம் காண்பிப்பதாகும். இந்தியாவில் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் இன்றும் நடைமுறையில் உள்ள ஜவுளி மீது அச்சிடும் பழமையான வகைகளில் ஒன்று அஜ்ராக் ஆகும். இந்த பாணியில் அச்சிடப்பட்ட ஜவுளி இருபுறமும் இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தி கையால் அச்சிடப்படுகிறது (குறிப்பிட்ட பகுதிகளில் சாயம் ஊடுருவுவதைத் தடுக்கக் கையாளும் முறையாகும்)
இணைய தொடர்களின் அமர்வுகள் இப்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured மற்றும் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகங்களிலும் கிடைக்கின்றன.
இணையத் தொடரின் அடுத்த அத்தியாயம் ஜூன் 2, 2020ஆம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது, இதன் தலைப்பு ‘ஹரியானா: கலாச்சாரம், உணவு மற்றும் சுற்றுலா’. கீழ்காணும் லிங்கில் பதிவு செய்யுங்கள்: https://bit/ly/3dmTbmz.
**********
(Release ID: 1628313)
Visitor Counter : 278