எரிசக்தி அமைச்சகம்

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிபிஇ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்சுகளை மின் நிதிக்கழகம் வழங்குகிறது

Posted On: 30 MAY 2020 2:45PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு நடவடிக்கையாக, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமுமான மின் நிதிக்கழகம், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ.1.23 கோடி நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

முன்களப் பணியாளர்களுக்கு 500 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய ஆறு ஆம்புலன்சுகளை வாங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இவை உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படும்.

மின் நிதிக்கழகத்தின் சமூகப் பொறுப்புடைமை முன்முயற்சி, உத்தரகாண்ட் மாநிலத்தின் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்பாடுகளுக்கு மேலும் ஆதரவு அளிக்கும்.(Release ID: 1627907) Visitor Counter : 137