வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கொவிட்-19 மேலாண்மை மற்றும் கட்டுப்படுத்துதலில் சூரத் பொலிவுறு நகரம் முக்கிய தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Posted On: 29 MAY 2020 3:05PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், சூரத் மாநகராட்சி பல்வேறு தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை எடுத்துள்ளது. கொவிட்-19 பாதித்த தனிநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலப் பயணம் செய்தவர்களை கண்டறியும் வகையில், ‘’எஸ்எம்சி கொவிட்-19 டிராக்கர்’’ என்ற பெயரில் கைபேசிச் செயலி, வலைத்தளம் உள்பட எஸ்எம்சி (Surat Municipal Corporation -SMC) கொவிட்-19 டிராக்கர் முறையை சூரத் மாநகராட்சி உருவாக்கியுள்ளது. எஸ்எம்சி வலைதளத்தின் மூலம் சுய பிரகடனம், உதவி மைய எண்ணில் தகவல், சர்வதேசப் பயணம் குறித்த இந்திய அரசின் தகவல் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் பயணிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

எஸ்எம்சி கொவிட்-19 டிராக்கிங் முறை, ஆன்ட்ராய்டு , ஐஓஎஸ் செயலி ஆகியவை 5 நாட்கள் என்ற குறுகிய நாட்களுக்குள் உருவாக்கப்பட்டது. இதுவரை, 3800 தனிநபர்களின் தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைபேசிச் செயலி பயன்படுத்தும் 2800க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தங்களது இருப்பிடங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வருகின்றனர். மருத்துவப் பரிசோதனை விவரங்களை தினசரி இரண்டு முறை தாக்கல் செய்து வருகின்றனர்.


(Release ID: 1627881) Visitor Counter : 257