பாதுகாப்பு அமைச்சகம்

மடகாஸ்கரின் அண்ட்சிரனனா துறைமுகத்தில் ஐஎன்ஸ் கேசரி.

Posted On: 29 MAY 2020 5:35PM by PIB Chennai

மிஷன் சாகரின் ஒரு பகுதியாக இந்தியக் கப்பல்படைக் கப்பல் ‘கேசரி’ மடகாஸ்கரின் அண்ட்சிரனனா துறைமுகத்தை 27 மே 2020இல் சென்றடைந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டு சமாளிப்பதில் நட்புரீதியான அயல்நாடுகளுக்கு இந்தியா இத்தகைய சிரமமான காலகட்டத்திலும் உதவி புரிந்து வருகிறது.  இந்த உதவியின் ஒரு பகுதியாக மடகாஸ்கர் மக்களுக்கு கோவிட் தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை ஐஎன்எஸ் கேசரி எடுத்துச் சென்றுள்ளது.

இந்திய அரசிடம் இருந்து வந்த மருந்துப் பொருள்களை மடகாஸ்கர் அரசிடம் ஒப்படைக்கும் அரசு ரீதியான நிகழ்ச்சி மே 29, 2020இல் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் மடகாஸ்கரின் வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு எம்.டெகின்ட்ராஜனரிவேலோ லிவா ஜாகோபா கலந்து கொண்டார்.  இந்தியத் தரப்பில் இருந்து மடகாஸ்கருக்கான இந்தியத் தூதர் திரு அபய்குமார் கலந்து கொண்டார்.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் களத்துக்கே சென்று உதவும் இந்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மடகாஸ்கருக்கும் உதவி அளிக்கப்பட்டது.  கோவிட்-19க்கு எதிரான போரில் மற்றும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிரமங்களை எதிர்கொள்வதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தற்போது இருக்கும் நட்புறவை ”மிஷன் சாகர்” மேலும் வலிமையானதாக்கி உள்ளது.  இந்த உதவியானது சாகர் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாவல் மற்றும் வளர்ச்சி குறித்த நமது பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதோடு இந்தியப் பெருங்கடல் பிராந்திய (IOR) நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் தருவதையும் இது எடுத்துக்காட்டுகிறது.  இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இதர ஏஜென்சிகளின் தீவிரமான ஒருங்கிணைப்பால் இந்தச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 



(Release ID: 1627753) Visitor Counter : 246