சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

Posted On: 29 MAY 2020 4:56PM by PIB Chennai

கோவிட்-19 முன்தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்காக இந்திய அரசானது படிப்படியான, தற்காப்பான மற்றும் தாமே முன்வந்து செயலாற்றும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து எடுத்து வருகிறது.  இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படுவதோடு உயர்மட்ட அளவில் கண்காணிக்கப்படவும் செய்கின்றன.

தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 89,987 ஆகும்.  இதுவரை மொத்தமாக 71,105 நோயாளிகள் குணம் அடைந்து உள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 3,414 நோயாளிகள் குணம் அடைந்து உள்ளனர்.  இதனோடு சேர்த்துப் பார்த்தால், குணம் அடைபவர்களின் விகிதம் 42.89 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 தொடர்பான அனைத்து நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ அண்மைத் தகவல்களுக்கும் அது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினைகள், வழிகாட்டு நெறிமுறைகள், ஆலோசனைத் தொகுப்புகள் ஆகியவற்றுக்கு தயவுசெய்து https://www.mohfw.gov.in/  மற்றும்  @MoHFW_INDIA என்ற வலைத்தளங்களைப் பார்க்கவும்.

கோவிட்-19 குறித்த எந்த ஒரு சந்தேகத்துக்கும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண்ணான +91-11-23978046  அல்லது 1075ல்  (கட்டணமில்லாத் தொலைபேசி) தொடர்பு கொள்ளவும்கோவிட்-19 தொடர்பான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்கள் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf  என்ற வலைத்தளத்தில் கிடைக்கும்.


(Release ID: 1627752) Visitor Counter : 300