தேர்தல் ஆணையம்

வரையறை ஆணையக் கூட்டம்

Posted On: 28 MAY 2020 8:22PM by PIB Chennai

2020 ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற வரையறை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலுக்கு இணங்க, அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய மே 28-ம்தேதி கூட்டம் நடைபெற்றது.

கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக செயல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், முதல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதில் ஏற்கனவே சற்று தாமதம் ஏற்பட்டது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மாநில தேர்தல் ஆணையரிடமிருந்து விவரங்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.

வரையறைச் சட்டம் 2002-ன்படி உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தேவைப்படும் உதவி மக்களவையிலிருந்து  பெறப்பட்டது. அதேபோல, அசாம், மணிப்பூரிலிருந்து உறுப்பினர்களின் நியமனங்களும் பெறப்பட்டுள்ளன. தேவைப்படும் மக்கள் தொகை தரவுகள் இந்திய மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஏதேனும் தகவல்கள் நிலுவையில் இருந்தால் அவற்றை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கால வரம்புக்குள் சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்களிடம் இருந்து தேவையான தரவுகள், வரைபடம் ஆகியவற்றை கேட்டுப்பெறுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.(Release ID: 1627614) Visitor Counter : 255