தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் நலன் தொடர்பான அண்மைத் தரவுகளுக்கான ட்விட்டர் கணக்கு – திரு சந்தோஷ் கங்குவார் துவக்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
28 MAY 2020 2:55PM by PIB Chennai
தொழிலாளர் நலன் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அண்மைத் தரவுகளை அளிப்பதற்கான @LabourDG என்ற ட்விட்டர் கணக்கினை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்குவார் நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் திரு ஹீராலால் சமரியா, தொழிலாளர் நல அமைப்பின் தலைமை இயக்குநர் திரு.டிபிஎஸ் நேகி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ட்விட்டர் கணக்கில் இந்திய தொழிலாளர் சந்தை அலகுகள் தொடர்பான அண்மைத் தரவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும் என்று அமைச்சர் ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
------
(रिलीज़ आईडी: 1627422)
आगंतुक पटल : 275