விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 13.4 கோடி பயனாளிகளுக்கு 1.78 லட்சம் MT பருப்பு வகைகள் விநியோகிக்கப்பட்டன

Posted On: 27 MAY 2020 7:03PM by PIB Chennai

பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா (PM GKY) திட்டத்துக்கு 4.57 லட்சம் மெட்ரிக் டன் பருப்புவகைகள், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 1.78 லட்சம் பருப்புவகைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 1340 .61 லட்சம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

 

  • ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 9 மாநிலங்களில் இருந்து 7.33 லட்சம் மெட்ரிக் டன் கடலைப்பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

 

  • ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 5.91 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

  • தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒரிசா ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து 2.41 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

2020- 21 ஆம் ஆண்டுக்கான ரபி சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்திய உணவுக்கழகத்திற்கு மொத்தம் 359.10 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வந்து சேர்ந்தது. இதில் 347.54 லட்சம் மெட்ரிக் டன் வாங்கப்பட்டு விட்டது.

 

பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN)  திட்டத்தின் கீழ் பொதுமுடக்கக் காலத்தின் போது 24. 3. 2020 அன்று முதல் இன்று வரை 9.67 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 19,350.84 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது(Release ID: 1627259) Visitor Counter : 33