அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியில் கோவிட் 19 கதை நிகழ்ச்சியை உருவாக்கியது என்.சி.எஸ்.டி.சி.

Posted On: 27 MAY 2020 5:25PM by PIB Chennai

தேசிய அறிவியல், தொழில்நுட்பத் தகவல் அளிப்புக் கவுன்சில் (என்.சி.எஸ்.டி.சி.), அறிவியல் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.) ஆகியவை டாக்டர் அனாமிகா ராய் நினைவு அறக்கட்டளையுடன் இணைந்து கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்த அனைத்து முக்கிய தகவல்கள் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்க பிரபலமாக உள்ள மல்டிமீடியா வழிகாட்டியின் இந்திப் பதிப்பை உருவாக்கியுள்ளன.

இதன் ஆங்கிலப் பதிப்பு  இந்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. கோவிட் கதையின் இந்திப் பதிப்புக்கான தேவை அதிகமாக இருந்த நிலையில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் தேவை அதிகம் இருந்த நிலையில் இதன் இந்திப் பதிப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் திருத்தப்பட்ட மற்றும் கூடுதல் தகவல்களும் மக்கள் நலனுக்காக சேர்க்கப்பட்டுள்ளன.

கோவிட் கதை: பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மல்டிமீடியா வழிகாட்டி குறித்து பாராட்டு தெரிவித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுட்டோஷ் சர்மா, சாமானிய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்குப் புரிகிற மொழி நடையில் தகவல்களை அளிக்க வேண்டியது முக்கியம் என்று கூறினார். பெருமளவு பேசப்படும் மொழியாக இந்தி இருப்பதால், கோவிட் கதையின் இந்திப் பதிப்பு அதிக மதிப்பைப் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 குறித்து மல்டிமீடியா நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, அறிவியல் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசு இணைந்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக கலந்துரையாடல் எலெக்ட்ரானிக் வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளன. உரிய அறிவு மற்றும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.

கோவிட் கதைக்கு ஆதரவாக மக்களின் ஆதரவு நாடு முழுக்கப் பெருகி வருகிறது. அதன் சங்கிலித் தொடர் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேகாலயாவில் காசி மொழியில் கோவிட் கதை மொழிபெயர்ப்பு செய்யப் படுகிறது. தமிழ்ப் பதிப்பும் உருவாக்கப்படுகிறது. பெங்காலி மற்றும் அசாமிய மொழிகளில் இதை உருவாக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

 (Release ID: 1627254) Visitor Counter : 21