பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்று குறித்த தற்போதைய நிலையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பரிசீலனை.

Posted On: 27 MAY 2020 5:00PM by PIB Chennai

யூனியன் பிரதேசத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரும்பி உள்ளதால் ஜம்மு-காஷ்மீரில் கோவிட்-19  பெருந்தொற்று அதிகரித்திருப்பது குறித்து வடகிழக்கு மண்டல மேம்பாடு, பிரதமர் அலுவலகம்,  பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகிய துறைகளின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பரிசீலித்தார்.  தேசிய சுகாதார இயக்கத்தின், இயக்க இயக்குர், ஜம்மு காஷ்மீர் பிரிவின் சுகாதாரச் சேவை இயக்குர், மாவட்டங்களில் அனைத்து முக்கிய மருத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் காணொளி மாநாடு மூலமாக பரிசீலனை நடத்தப்பட்டது.

 

கள அளவிலான அறிக்கைகள் குறித்து, சுகாதார அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். யூனியன் பிரதேசத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்; இவர்களுக்கு கட்டாயமாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்து சென்றுவிடும் ஒரு கட்டமே என்று அவர்கள் கூறினார்கள்.

 

யூனியன் பிரதேசம் எடுத்துள்ள முயற்சிகளை டாக்டர்.ஜிதேந்திர சிங் பாராட்டினார். தொற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து சுகாதார ஊழியர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும், யூனியன் பிரதேசம் நல்ல பணியாற்றி வருகிறது என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். நோய் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டர்களுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டறிவதும், தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் நோயாளிகளுக்கு, பயனுள்ள முறையில் சிகிச்சை அளிப்பதும் அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.



(Release ID: 1627242) Visitor Counter : 290