மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆரோக்கிய சேது இப்போது திறந்தநிலை ஆதாரம்

Posted On: 26 MAY 2020 8:18PM by PIB Chennai

2020 ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியா ஆரோக்கிய சேது என்னும் கைபேசி செயலியைத் தொடங்கியது. புளூடூத் அடிப்படையிலான இந்தச் செயலி, கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்துல், கொவிட்-19 பற்றிய உரிய தகவல்களைப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டது. மே 26-ம் தேதி நிலவரப்படி, இந்தச் செயலியை 114 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். இது எந்த தொடர்பு செயலி பயன்பாட்டை விடவும் அதிகமாகும். இந்தச் செயலி 12 மொழிகளில், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் தொலைபேசிகளிலும், கைஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சேது செயலி ஒரு மெய்க்காவலர் என்று பல இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.ஆரோக்கியாவின் முக்கிய தூண்கள் வருமாறு.

இந்தியாவின் கொள்கையின்படி ஆரோக்கிய சேது வெளிப்படைத் தன்மையுடனும், அந்தரங்கத் தகவல்கள் பாதுகாப்பையும் கொண்டது. திறந்தநிலை மென்பொருள் ஆதாரம் என்னும் இந்திய கொள்கைக்கு ஏற்ப, ஆரோக்கிய சேதுவின் ஆதாரக்குறியீடு தற்போது திறந்தநிலை ஆதாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. செயலியின் ஆன்ட்ராய்டு பதிப்புக்கான ஆதாரக் குறியீடு ஆய்வுக்காகவும், கூட்டு செயல்பாட்டுக்காகவும் https://github.com/nic-delhi/AarogyaSetu_Android.git.-ல் கிடைக்கிறது. செயலியின் ஐஓஎஸ் பதிப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திறந்தநிலை ஆதாரமாக வெளியிடப்படும். அதன் சர்வர் குறியீடு அதன் தொடர்ச்சியாக வெளியிடப்படும். ஆரோக்கிய சேது செயலியின் 98% பயன்பாட்டாளர்கள் ஆன்ட்ராய்டு தளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆதாரக் குறியீட்டை, உருவாக்கும் சமூகத்துக்கு திறந்து விட்டிருப்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டுறவில் நமக்கு இருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆரோக்கிய சேதுவின் முன்னேற்றம், அரசு, தொழில்துறை, கல்வித்துறை, மக்கள் ஆகியோருக்கிடையிலான கூட்டுறவுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். திறமையான இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லும், பகலும் பாடுபட்டு, தங்கள் கடின உழைப்பால், உலகத்தரம் வாய்ந்த இந்தச் செயலியை உருவாக்கியுள்ளனர். பொது வெளியில் ஆதாரக் குறியீட்டை வெளியிட்டதன் மூலம், நாம் கூட்டுறவை விரிவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும். நம் நாட்டின் மக்கள் மற்றும் திறமையான இளைஞர்கள் மத்தியில் உள்ள தொழில்நுட்பத்திறனை இதில் ஈடுபடுத்தவும், மேலும்,  வலுவான, பாதுகாப்பான தொழில்நுட்பத் தீர்வை கூட்டாகக் கட்டமைத்து, பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரிதும் உதவவும் இது வழிவகுக்கும்.

********


(Release ID: 1627125) Visitor Counter : 930