ஜவுளித்துறை அமைச்சகம்
தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளின் சோதனை மாதிரிகள் ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களால் தற்போது பரிசோதித்து சான்றளிக்கப்படுகின்றன.
Posted On:
26 MAY 2020 5:48PM by PIB Chennai
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள தொழில்நுட்ப விவரக் குறிப்புகளின் படி, தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளின் சோதனை மாதிரிகள் ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களால் பரிசோதித்து சான்றளிக்கப்படுகின்றன. கொவிட்-19க்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் படி நடத்தப்படும் பரிசோதனை முறைகள், 'செயற்கை ரத்த ஊடுருவல் எதிர்ப்புச் சோதனையை' பொறுத்த வரை, ISO 166603 வகை 3 மற்றும் அதற்கு அதிகமான தரத்தில் நடத்தப்படுகிறது. பயன்படுத்துபவருக்கு முழு பாதுகாப்பை அளிக்கும் வகையில், எந்தவிதமான திரவமும், தூசுப்படலமும் உள்ளே புக முடியாதவாறு தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் வடிவமைக்கப்படுகின்றன.
சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து, பிரத்யேக சான்றளிக்கப்பட்டக் குறியீடு உள்ளே அச்சிடப்பட்டுள்ள கவச உடைகளையே வாங்குமாறு அனைத்து அரசு கொள்முதல் முகமைகளும், தனியார் மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஜவுளி அமைச்சகத்தின் வலைதளமான www.texmin.nic.in-இல் உள்ள சுட்டியில் வெளியிடப்பட்டுள்ள சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சான்றளிக்கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து பொருள்களை வாங்குமாறு உபயோகிப்பாளர்களும், கொள்முதல் முகமைகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகளில் இருந்து அவ்வப்போது மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் அளித்து பரிசோதிக்குமாறு கொள்முதல் முகமைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை www.texmin.nic.in என்னும் முகவரியில் காணலாம்.
***
(Release ID: 1626983)
Visitor Counter : 349