பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, யூனியன் பிரதேசத்தில் கொவிட் நிலைமை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து லடாக் லெப்டினன்ட் கவர்னர் திரு ஆர் கே மாத்தூர் விவாதித்தார்.

Posted On: 26 MAY 2020 5:35PM by PIB Chennai

லடாக் லெப்டினன்ட் கவர்னர் திரு ஆர் கே மாத்தூர் இன்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து கோவிட் நிலைமை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சி நடவடிக்கைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இந்தத் தொற்றுநோய் காலம் முழுதிலும் மத்திய அரசு நாள்தோறும் உதவி வழங்கியமைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றதற்கு மத்திய பிராந்திய நிர்வாகம் விடாமுயற்சியுடன் கையாண்ட தொடர்ச்சியான முயற்சிக்கு அரசாங்கத்தின் பாராட்டு என்று டாக்டர் ஜிதேந்திர சிங், லெப்டினன்ட் கவர்னருக்கு முறையாகத் தெரிவித்தார். ஈரான் புனித யாத்திரையிலிருந்து திரும்பி வந்தவர்களிடமிருந்து கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து திடீரென பலர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போது, ​​முழு நாட்டிற்கும் ஆரம்ப எச்சரிக்கையை ஏற்படுத்தியது லடாக் தான் என்று அவர் குறிப்பிட்டார், ஆனால் கொரோனா தாக்குதலில் இருந்து படிப்படியாக வெளிவந்ததில் லடாக் முதன்மையானது என்பதற்குரிய பாராட்டு லடாக் நிர்வாகத்திற்கும், லடாக் சமூகத்திற்கும் செல்கிறது.

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் நிலையில், டாக்டர் ஜிதேந்திர சிங் “லே பெர்ரி” ஐ செயலாக்குவதற்கான திட்டத்தையும் குறிப்பிட்டார், இதற்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளது.

***************



(Release ID: 1626955) Visitor Counter : 173