சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

BS VI-ல் L7 வகைப்பாட்டு வாகனங்களுக்கான புகை வெளிப்பாட்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கை.

Posted On: 24 MAY 2020 5:56PM by PIB Chennai

BS VI-க்கு L7 (நான்கு சக்கர வாகனம்) வகைப்பாட்டு வாகனங்களுக்கான புகை வெளிப்பாடு கட்டுப்பாடுகள் தொடர்பாக 22 மே 2020 தேதியிட்ட GSR 308(E ) அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அறிவிக்கை வெளியான தேதியில் இருந்து இந்த நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்தியாவில்  L, M மற்றும் N வகைப்பாட்டு வாகனங்களுக்கான BS VI நடைமுறைகள் இந்த அறிவிக்கையுடன் பூர்த்தியாகின்றன. ஐரோப்பிய யூனியன், WMTC உடன் இயைந்ததாக இந்த புகை வெளிப்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமைந்துள்ளன. பரிசோதனைக்கான நடைமுறை AIS 137-பகுதி 9-இல் தெரிவிக்கப் பட்டுள்ளன.

*****

 (Release ID: 1626601) Visitor Counter : 44