பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபருடன் தொலைபேசியில் உரையாடல்.
Posted On:
23 MAY 2020 2:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இலங்கை அதிபர் மாண்புமிகு கோத்தபய ராஜபக்சேவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்தும், அதனால் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்தும் அவர்கள் பேசினர்.
நோய்த் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு இந்தியா அளிக்கும் என்று இலங்கை அதிபரிடம் பிரதமர் உறுதியளித்தார்.
இலங்கையில் பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு தங்கள் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி பிரதமரிடம், இலங்கை அதிபர் தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். இந்தியத் தனியார் துறையினரால் இலங்கையில் மதிப்புக் கூட்டிய பொருள்கள் உற்பத்திக்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
****
(Release ID: 1626408)
Visitor Counter : 275
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam