ரெயில்வே அமைச்சகம்

ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான முன்பதிவு சேவை முழுவீச்சில் நடைபெறுகிறது

Posted On: 22 MAY 2020 9:32PM by PIB Chennai

ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து இந்திய ரயில்வேயின் மேலும் சில ரயில் சேவைகளை இயக்குவது என்று மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு ரயில்வே அமைச்சகம்,முடிவு செய்துள்ளது.

 

நாடு முழுவதும் நாள்தோறும் 200 பயணிகள் ரயில்களை, இந்திய ரயில்வே இயக்கத் துவங்கும். இந்த ரயில்கள் 1 ஜூன் 2020 முதல் இயங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதி 21 மே 2020 முதல் துவங்கியது 1 மே 2020 முதல் ஏற்கனவே ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 12 மே 2020 முதல் சிறப்பு ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1 ஜூன் 2020 முதல் இயக்கப்படவுள்ள இந்த 200 ரயில்கள், ஏற்கனவே இயக்கப்படும் ரயில்கள் தவிர கூடுதலாக இயக்கப்பட உள்ள ரயில்களாகும்.

 

IRCTC இணையதளம் அல்லது அலைபேசி செயலி வழியாக இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுகிறது. பயணச்சீட்டுகளை, முன்பதிவு செய்யும் கவுண்டர்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பொதுச் சேவை மையங்கள், பயணச்சீட்டு முகவர்கள் மூலமாகவும் 21 மே 2020 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுகள் முன்பதிவு 21 மே 2020 அன்று தொடங்கியது. 22 மே 2020 அன்று 20:14 மணி (இரவு 8 மணி 14 நிமிடம்) வரை, 200 ரயில்களும் முன்பதிவு கிடைக்கும் வகையில் இருந்தன. 6,52,644 பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த ரயில்களில் 14,13,277 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

 

****



(Release ID: 1626377) Visitor Counter : 153