சுற்றுலா அமைச்சகம்

``தேக்கோ அப்னா தேஷ்'' என்ற தொடரின் கீழ் ``புலிகளும் சுற்றுலாவும்'' என்ற தலைப்பில் இணையவழி காட்சிக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு.

Posted On: 22 MAY 2020 7:47PM by PIB Chennai

தேக்கோ அப்னா தேஷ் திட்டத்தின் கீழ் `புலிகளும் சுற்றுலாவும்' என்பது குறித்த இணையவழி தொடர் நிகழ்ச்சிக்கு 2020 மே 21ஆம் தேதி சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவில் புலிகள் வாழும் பகுதிகள் பற்றிய தகவல்களைக் கொண்டதாகவும், இந்தியாவின் சுற்றுலாவில் அது எந்த அளவுக்குத் தொடர்புடையதாக இருக்கிறது என்ற தகவல்களை அளிப்பதாகவும் இந்த இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி அமைந்திருந்தது.

பிரபல வனவிலங்குப் பாதுகாப்பு புகைப்பட நிபுணரும், திரைப்படம் எடுப்பவரும் நேஷனல் ஜியாகிரபிக் அந்தஸ்து பெற்றவரும், புகைப்படக்கலையில் BAFTA விருது பெற்றவரும், திரைப்படமாக்கலில் தனிச்சிறப்புக்காக EMMY விருதுக்கு முன்மொழியப்பட்டவருமான திரு சந்தேஷ் காடுர், புலிகள் மற்றும் சுற்றுலா குறித்து ஒரு மணி நேரம் பேசினார். புகழ்பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர் ஜிம் கோர்பெட் எழுதிய புத்தகங்களை இளம் வயதில் படித்தது, புலிகளின் வாழ்வை ஆவணப்படுத்துதலில் ஏற்பட்ட ஆர்வம் பற்றிய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மற்றும் சுற்றுலா குறித்த வீடியோவை ஆவணப்படுத்துவதற்காக அவர் இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டார். புலிகளின் எண்ணிக்கைக்கும், இந்திய சுற்றுலா துறையின் தாக்கத்துக்கும் உள்ள தொடர்புகளை அந்தக் காலகட்டத்தில் அவர் புரிந்து கொண்டார்.

இந்தியாவில் பல்வேறு வனப் பகுதிகளில் உலகிலுள்ள புலிகளில் 70 சதவீதப் புலிகள் வாழ்ந்து வருகின்றன. 15 இனங்களைச் சேர்ந்த புலிகள் இப்போது 50 காப்புக் காடுகளில் வாழ்கின்றன.

பொறுப்பான சுற்றுலாவாசியாக இருந்து, இயைந்து வாழும் நடைமுறைகளைப் பின்பற்றுவது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதாக இருக்கும் என்று Wild Cats of India என்ற ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தேஷ் காடூர் விவரித்துள்ளார். இந்தியாவில் பல வகையான வனவிலங்குகள் வாழ்வதால், பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவைகளின் நீடித்த வாழ்வியலில் கவனம் செலுத்தாமல் போனால், அவ்வாறு கூட்டம் சேருவது விலங்குகளுக்கு, பொதுவாக புலிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

2020 மே 23 ஆம் தேதி 11.00 மணி முதல் 12.00 மணி வரையில் `சைக்கிள் மூலமான சுற்றுலா - சைக்கிளின் வேகத்தில் சென்று இந்தியாவைக் காணுதல்' என்ற தலைப்பில் அடுத்த இணையவழி நிகழ்ச்சி நடைபெறும். பின்வரும் இணையதள சுட்டியில் அதற்குப் பதிவு செய்து கொள்ளலாம்.  https://bit.ly/BicycleToursDAD

 

 

 

*******


(Release ID: 1626373) Visitor Counter : 243