நிதி அமைச்சகம்

அரசாங்கக் கடன் குறித்த நிலை அறிக்கையின் 9 வது பதிப்பு

Posted On: 22 MAY 2020 4:35PM by PIB Chennai

இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்தக் கடன் நிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்கும் அரசுக் கடனின் நிலை ஆய்வறிக்கையின் ஒன்பதாவது பதிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2010-2011 முதல் மத்திய அரசு அரசின் கடன் குறித்த ஒரு நிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆவணம் ஆண்டின் கடன் நடவடிக்கைகளின் விரிவான கணக்கை வழங்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. இது 2018-2019 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உள்ளடக்கியது. அரசாங்கத்தின் கடன் சேவை ஒரு விவேகமான  சுயவிவரத்தால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் அரசாங்கம் முதன்மையாக அதன் நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன்களை நாடுகிறது. கடன் நிலைத்தன்மையின் வழக்கமான வழிகாட்டிகள், அதாவது, கடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம், வருவாய் ரசீதுகளுக்கான வட்டி செலுத்துதல், மொத்தக் கடனின் குறுகிய காலக்கடன் / வெளிக்கடன் / FRB’s பங்குகள் ஆகியவை ஆவணத்தில் விரிவான முறையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆவணத்தில் 2019-2020 முதல் 2021-2022 வரையிலான நிதியாண்டுகளுக்கான மத்திய அரசின் கடன் மேலாண்மை உத்தி உள்ளது, இது அரசாங்கத்தின் கடன் திட்டத்திற்கு வழிகாட்டும்.

நிலைத்தாள் நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது: https://dea.gov.in/public-debt-management

*****



(Release ID: 1626131) Visitor Counter : 208