நிதி அமைச்சகம்

1 ஏப்ரல் 2020 முதல் இதுவரை 26,242 கோடி ரூபாய்க்கான தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 22 MAY 2020 3:15PM by PIB Chennai

நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியம், வருமான வரி செலுத்தும் 16,84,298 பேருக்கு, 1 ஏப்ரல் 2020 முதல் 21  மே 2020 வரையிலான காலத்தில், 26,242 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பி அளிப்பதற்கான தொகையைth திருப்பி அளித்துள்ளது இந்தக் காலகட்டத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டிய தொகையான 14,632 கோடி ரூபாய் 15,81,906 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான திருப்பி அளிக்கப்பட வேண்டிய வரித்தொகை 11, 610 கோடி ரூபாய் 1,02,392  நிறுவனங்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது

 

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் சுயசார்பு இந்தியா திட்டம்,  சென்ற வாரம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களால், அறிவிக்கப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துபவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டிய தொகை மேலும் விரைவாக திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதாவது 9 மே 2020 முதல் 16 மே 2020 வரையிலான காலத்தில் 37,531 பேருக்கு 2050. 61 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன வரி செலுத்தும் 2878 பேருக்கு 867. 62 கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் அதாவது 17 மே 2020 முதல் 21 மே 2020 வரையிலான காலத்தில் 1,22,7 64 பேருக்கு 2672. 97 கோடி ரூபாய் திருப்பிளிக்கப்பட்டது.

 

அறக்கட்டளைகள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் கூட்டு நிறுவனங்கள் உட்பட 33,774 நிறுவனங்களுக்கு 6714.34 கோடி ரூபாய் திருப்பிளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,56,538 பேருக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ள மொத்த தொகை 9787. 31 கோடி ரூபாய்.



(Release ID: 1626087) Visitor Counter : 238