சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட மாநிலங்கள் விருப்பம்
Posted On:
21 MAY 2020 8:45PM by PIB Chennai
மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களின் அரசு அதிகாரிகள் ஆகியோருடன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் நிலையான, ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், டாக்டர். கஸ்தூரி ரங்கன் தலைமையில் உயர்நிலை செயல் குழுவை மத்திய அரசு அமைத்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட புவியியல் பகுதிகளை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கலாம் என இந்தக் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பகுதிகளை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கும் வரைவு அறிவிப்பு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இதன் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என மாநிலங்கள் ஒருமித்த கருத்தை தெரிவித்தன.
(Release ID: 1626010)
Visitor Counter : 290