குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

உள்ளுரில் இருந்து உலகம் முழுவதற்கும்: அந்நிய சந்தைகளுக்கு காதி முகக்கவசங்கள்:

Posted On: 21 MAY 2020 4:06PM by PIB Chennai

மிகவும் பிரபலமாக உள்ள காதி முகக்கவசம் உலக அளவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. மருத்துவம் சாராத, அறுவை சிகிச்சை சாராத அனைத்து வகையான முகக்கவசங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் விலக்கிக் கொண்டதைடுத்து, காதி, பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் கண்டறியும். இதுதொடர்பான அறிவிக்கை 16 மே 2020 அன்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்குரகத்தால் வெளியிடப்பட்டது.

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் – “சுயசார்பு இந்தியாதிட்டத்தின் கீழ் உள்ளூரிலிருந்து உலக அளவிற்கு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்த சில தினங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முகக்கவசங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு இரட்டை அடுக்குகள் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்களைத் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம், தயாரித்துள்ளது. இவை ஆண்களுக்கு இரண்டு வண்ணங்களிலும், பெண்களுக்கு பல வண்ணங்களிலும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த ஆணையம் 8 லட்சம் முகக் கவசங்களை வழங்குவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. பொது முடக்க காலத்தின்போது ஏற்கனவே ஆறு லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு விட்டன.

துபாய், அமெரிக்கா, மொரீஷியஸ், பல ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு காதி முகக்கவசங்களை வழங்க காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நாடுகளில் காதி மிகவும் பிரபலமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக காதி முகக்கவசங்களை விற்க இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.



(Release ID: 1625987) Visitor Counter : 201