புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

கோனார்க் சூரியக் கோவில் மற்றும் கோனார்க் நகரை முற்றிலும் சூரிய சக்தி மின்சாரமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது

Posted On: 20 MAY 2020 3:48PM by PIB Chennai

ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியக் கோவில் மற்றும் கோனார்க் நகரம் முழுவதையும் சூரிய மின்சக்தி மயமாக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பேசிய மத்திய எரிசக்தி மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஆர்.கே.சிங், ‘’ஒடிசாவின் கோனார்க் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சூரியக்கோவிலை ‘சூரிய நகராக’ உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்கைச் செயல்படுத்தும் விதத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூரியசக்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பழமையான சூரியக் கோவிலை சூரியசக்தி மின்சாரம் மூலம் நவீனப்படுத்தப்படும். சூரியசக்தி ஒருங்கிணைப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற செய்தியை இது வெளிப்படுத்தும்’’ என்று கூறினார்.

இத்திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன், நிறைவேற்றப்படுகிறது. சூரியசக்தி மரங்கள், சூரியசக்தி குடிநீர் வழங்கும் நிலையங்கள், சூரியசக்தி மின் நிலையங்கள் போன்றவற்றை செயல்படுத்தும் 10 மெகாவாட் சூரியசக்தி நிலையம் அமைக்கப்படும். மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின், ரூ.25 கோடி செலவிலான இத்திட்டம் ஒடிசாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையால் செயல்படுத்தப்படும்.


(Release ID: 1625671) Visitor Counter : 257