வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கொரோனா மேலாண்மைக்கான வடகிழக்கு ‘மாதிரி’

Posted On: 20 MAY 2020 3:20PM by PIB Chennai

கொரோனா மேலாண்மை குறித்து வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

 

“பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதுமே வடகிழக்குப் பகுதிக்கு உயர் முன்னுரிமை அளித்து வந்துள்ளார்.

 

தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வடகிழக்குப் பகுதிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதன் ஒட்டுமொத்த பலனை நாம் பார்க்கின்றோம். அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு முன்கூட்டியே தேவையான அளவு, விமான சரக்குப் போக்குவரத்து அனுப்புவது; மற்ற நாடுகளுடனான எல்லைப்பகுதிகளை முன்கூட்டியே அடைப்பது;  சமூக விலகியிருத்தல் போன்ற விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சிவில்  சமுதாயத்தை அதிக ஊக்கத்துடன் பங்கேற்கச் செய்வது என்று எந்த விதமாக இருந்தாலும், வடகிழக்குப் பகுதிக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 

இதன் பலனாக கடந்த ஆறு ஆண்டுகளில் மோடி அரசின் கீழ், வடகிழக்குப் பகுதி, கடந்த 6 மாதங்களில் வளர்ச்சிக்கான ‘மாதிரி’யாக உருவாகியுள்ளது. கொரோனா மேலாண்மையிலும் வடகிழக்குப் பகுதி ஒரு ‘மாதிரி’யாக உருவாகியுள்ளது மத்திய அரசு அளித்த தாராளமான ஆதரவுடன்,  வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் தாமாகவே முன்வந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தியாவின் மற்ற அனைத்து பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த மண்டலம் மேலும் சிறந்த முறையில் கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளச் செய்தது.

 

இதுநாள் வரை சிக்கிம் மற்றும் நாகாலாந்தில் ஒருவருக்குக் கூட கோவிட்-19 நோய் பாதிப்பு இல்லை என்பதிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வெற்றி தெரிய வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் தலா ஒருவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தற்போது குணமடைந்து விட்டார்கள். மேகாலயாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவரின் காரணமாக ஷில்லாங் மருத்துவமனையொன்றில் பதின்மூன்று பேருக்கு இந்த நோய் இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற அனைவரும் தற்போது குணமடைந்துவிட்டனர். மேகாலயாவிலும் தற்போது கோவிட் நோய் இல்லை. நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களில் கோவிட்-19 நோய் இல்லை. வடகிழக்கில் மிகப் பெரிய மாநிலமான அசாமில், சில நோயாளிகள் உள்ளனர். ஆனால் இந்தப் பெருந்தொற்றை, இம்மாநிலம் மிகச் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. உள்ளூர் பகுதிகளில் இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு பேருக்கு கோவிட்-19 நோய் இருந்தது. இவர்கள் குணமடைந்து விட்டார்கள். இந்த மாநிலங்களும் கோவிட்-19 இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் புலம்பெயர்ந்தவர்களிடையே தொற்று இருந்ததன் காரணமாக, மே மாதம் முதல் வாரத்தில், திரிபுராவில், குறிப்பாக அங்கு பணியிலிருந்த மத்திய ஆயுதக் காவல் படையினர் (Central Armed Police Forces - CAPF) இடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. மணிப்பூரில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஐந்து புதிய நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது, கடந்த மூன்று நான்கு நாட்களில் தெரியவந்துள்ளது.



(Release ID: 1625658) Visitor Counter : 149