ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உரத் துறையின் பங்குதாரர்களோடு கவுடா உரையாடினார்.
प्रविष्टि तिथि:
19 MAY 2020 6:04PM by PIB Chennai
பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகள், உரத்துறையின் அலுவலர்கள், முற்போக்கு விவசாயிகள் மற்றும் இதர பங்குதாரர்களோடு காணொளி மூலம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. டி வி சதானந்த கவுடா உரையாடினார்.
உரத் துறையில் மேற்கொள்ளக் கூடிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்த முக்கிய பின்னூட்டம் கூட்டத்தின் போது அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
சீர்த்திருத்தங்கள் தொடர் நடவடிக்கை என்றும் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரத்தை வாங்கக்கூடிய விலையில் வழங்கும் திறனை அதிகப்படுத்த அவை தேவை என்றும் திரு. கவுடா கூறினார். கூட்டத்தில் பங்குபெற்றோர் தங்களின் ஆலோசனைகளைத் தயக்கமின்றி கூற வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் தான் இறுதி முடிவுகள் எடுக்கும் போது அரசால் அவற்றை சேர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
உரத்துறை செயலாளர், கூடுதல் செயலாளர், கேரள மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
***
(रिलीज़ आईडी: 1625191)
आगंतुक पटल : 264