எரிசக்தி அமைச்சகம்

ஆத்மனிர்பர் பாரத் அபியன் திட்டத்தின் கீழ் ரூ 90,000 கோடி நிதி தொகுப்பை நீட்டிக்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய மின்துறை அமைச்சகம் கடிதம்

Posted On: 16 MAY 2020 6:53PM by PIB Chennai

வலியுறுத்தப்பட்ட மின் விநியோக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ 90,000 கோடி நிதி தொகுப்பை நீட்டித்து அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மின்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பான கடிதம் மே 14ம் தேதி அன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடினமான காலங்களில் ஜென்கோஸ் / டிரான்ஸ்கோஸால் வழங்கப்பட்ட மின்சார விநியோகத்தை பராமரிப்பது மின் விநியோக நிறுவனங்களின் சுமையை மின் துறைக்கான தொகுப்பு கணிசமாகக் குறைக்கும் என்று மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஆர். கே.சிங் கூறினார். ஆத்மநிர்பார் பாரத் அபியனின் ஒரு பகுதியாக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் கார்ப்பரேஷன்  மூலம்  ரூ 90,000 கோடி பணப்புழக்கத்தை ஏற்படுத்த இந்திய அரசு மே 13ம் தேதி அன்று முடிவு செய்தது.

அதன்படி நீண்ட கால இடைக்கால கடன்களை 10 ஆண்டுகள் வரை மின் விநியோக நிறுவனங்களுக்கு  நீட்டிக்கும்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், கிராமப்பற மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதிக் கழகம் உடனடியாக மின் விநியோக நிறுவனங்களுக்கு  கடன்களை நீட்டிக்கும் என்று குறிப்பிடுகின்றன, அவை உதய் மின் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூலதன வரம்புகளுக்குள் தேவைப்படும் தொகையை மேலும் கடன் வாங்க இயலும். மேலும், உதய் மின் திட்ட மூலதன வரம்பின் கீழ் தேவைப்படும் தொகை  இல்லாஆனால் மின்சார நிலுவைத் தொகை மற்றும் வழங்கப்படாத மானிய வடிவில் மாநில அரசிடமிருந்து பெறத்தக்கவைகளைக் கொண்ட மின் விநியோக நிறுவனங்களும்  இந்த கடன்களை மாநில அரசிடமிருந்து பெறத்தக்க அளவிற்கு தகுதியுடையவை.

இந்த கடன்கள் நீண்ட கால மற்றும் செயல்பாட்டு மூலதன தேவைக்கு எதிரானவை அல்ல என்பதால், மாநில அரசிடமிருந்து திருப்பிச் செலுத்தும் பாதுகாப்புடன், உதய் செயல்பாட்டு மூலதன வரம்புகள் பொருந்தாது.

 

**********



(Release ID: 1624745) Visitor Counter : 234