நிதி அமைச்சகம்
வளர்ச்சியின் புதிய பரிமானங்களை அறிவித்தார் நிதியமைச்சர் சுயச்சார்புமிக்க இந்தியாவிற்கு வழிவகுக்கும் எட்டு துறைகளில் கட்டமைப்பு சீர்திருத்தம்
Posted On:
16 MAY 2020 8:47PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த மே 12 ம் தேதி அன்று இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இணையான வகையில் ரூ. 20 லட்சம் கோடிக்கான சிறப்பு பொருளாதார தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். அதில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, செயல்முறை, உயிர்த்துடிப்புள்ள மக்கள், தேவை ஆகியவையே சுயச்சார்புமிக்க இந்தியாவின் ஐந்து தூண்கள் என்றும் அவர் வகைப்படுத்தினார்.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தனது தொடக்கவுரையில் கட்டமைப்பிற்கான சீர்திருத்தங்கள் தான் இன்றைய செய்தியாளர் கூட்டத்தின் கவனத்திற்குரிய விஷயமாக அமைகிறது என்று குறிப்பிட்டார். அரசின் கொள்கைகளை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளவும், அந்தத் துறை எதைக் கொடுக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாடுகளில் பங்கேற்கவும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் பல துறைகளிலும் கொள்கைகளை எளிமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தத் துறைகளில் உள்ள நெரிசல்களை குறைத்து விட்டோமெனில், அத்துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்காக ஊக்கத்தை நம்மால் தர முடியும் என்றும் நிதியமைச்சர் மேலும் கூறினார்.
சுயச்சார்புமிக்க இந்தியாவை நோக்கிய ஒரு முயற்சியாக முதலீட்டை மிக வேகமாக உள்ளிழுப்பதற்கான கொள்கை ரீதியான கீழ்க்கண்ட சீர்திருத்தங்களையும் நிதியமைச்சர் அறிவித்தார்:
அ. அதிகாரம் பெற்ற செயலாளர்களின் குழுவின் மூலம் முதலீட்டிற்கான அனுமதியை வழங்குவதில் விரைவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆ. முதலீடு செய்யத்தக்க திட்டங்கள் குறித்த பட்டியலை தயாரிக்கவும், முதலீட்டாளர்களுடன் மத்திய மாநில அரசுகளுடனான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
இ. புதிய முதலீடுகளுக்காக தங்களுக்கிடையே போட்டியிடுவதற்காக முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் திறமை வாய்ந்த மாநிலங்களின் தரவாரியான பட்டியல் உருவாக்கப்படும்.
ஈ. சூரிய ஒளி மூலமாக மின்சார உற்பத்திக்கான ஒளி மின்னழுத்த பலகைகளை உற்பத்தி செய்வது, முன்னேறிய செல் பேட்டரி சேமிப்புக் கலன்கள் போன்ற துறைகளில் புதிய முதன்மைத் துறைகளை வளர்த்தெடுப்பதற்கென ஊக்கத்தொகை திட்டங்கள் உருவாக்கப்படும்.
இதர முக்கிய அம்சங்கள்
நிலக்கரி துறையில் வணிக ரீதியான சுரங்க நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்
நிலக்கரி துறையில் பல்வேறு வகையான வாய்ப்புகள் உருவாக்கப்படும்
நிலக்கரி துறையில் தாராளமய ஏற்பாடுகள்
கனிமத் துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள்
ராணுவ உற்பத்தியில் சுயச் சார்புத் தன்மையை அதிகரிப்பது
ராணுவ தளவாட உற்பத்தியில் கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள்
வான் வழி போக்குவரத்து துறையில் வான்வழி மேலாண்மையை மேலும் சிறப்பாக செயல் படுத்துவது
தனியார்-பொதுத்துறை கூட்டு மூலம் மேலும் அதிகமான உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்குவது
விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல் ஆகிய துறைகளில் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றியமைத்தல்
எரிசக்தித் துறையில் கட்டணக் கொள்கையில் சீர்திருத்தங்கள்; துணைநிலை மாநிலங்களில் மின்வழங்கல் பிரிவுகளை தனியார்மயமாக்குதல்
சமூகத்துறையில் திருத்தியமைக்கப்பட்ட நம்பகத்தன்மைக்கான இடைவெளியை நிரப்புவதற்கான நிதித் திட்டத்தின் மூலம் தனியார் துறை முதலீட்டிற்கு ஊக்கமளிப்பது
விண்வெளி நடவடிக்கைகள் தனியார் பங்கேற்பிற்கு ஊக்கம் தருவது
அணுசக்தி துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது
(Release ID: 1624741)
Visitor Counter : 390
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam